Parai Drum Classes in Kent  

Mother of all percussion instruments, dating back to prehistoric times.

Story of Parai

“பறை” என்பது தமிழில் பேசுதல் அல்லது தெரிவித்தல் என்று பொருள், அது பண்டைய காலங்களில் தகவல் பரிமாற்றம் மற்றும் சமூக ஒன்றுகூடலுக்கான சின்னமாக விளங்கியது.

Parai” means to speak or to communicate in Tamil, reflecting its ancient role as a medium of communication and a symbol of community gathering.

பறையின் தோற்றம் மனித நாகரிகத்தின் ஆதிக்காலத்திற்கே செல்லும். குகைகளில் வேட்டையாடி வாழ்ந்த மனிதர்கள், விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி இசைக்கருவிகளை உருவாக்க முயன்றபோது— பறை பிறந்தது. இன்று பறை உலகின் அதிக பழமையான உயிர் வாழும் முரசுகளில் ஒன்றாக, முன்னேற்றமான நாகரிகத்தின் சான்றாக திகழ்கிறது.

தமிழ் பண்பாடு மற்றும் அடையாளத்தில் பறைக்கு ஆழமான இடம் உண்டு. சங்க இலக்கியங்களில் பறை அரசவைகளில் வாசிக்கப்பட்ட கருவியாக குறிப்பிடப்படுகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவாரம் பாடல்களிலும் கோயில் சந்நிதியிலேயே பரை இசைக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. ஆனால், கி.பி. 14ஆம் நூற்றாண்டின் போது, அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளால் பறைக்கு “தப்பு” (அசுபம் / inauspicious) என்ற பெயர் கொடுத்து தமிழ்க் கலைகளைத் தாழ்த்தினர்.

இன்று, பறை உலகம் முழுவதும் மீண்டும் மதிப்பும் மரியாதையும் பெற்று வருகிறது – இங்கிலாந்திலும் கூட. தளிர் தமிழ் கல்விக்கூடத்தில், பரை கற்றல் முதலில் தற்செயலாக தொடங்கிய ஒன்று. ஆனால் எங்கள் 2023 பொங்கல் விழாவில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன்பின், ஒழுங்குபடுத்தப்பட்ட பறை வகுப்புகள் தொடங்கி, சிறுவர் மற்றும் பெரியோரைப் பாறையை கற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தோம்.

இப்போது, எங்களிடம் 20க்கும் மேற்பட்ட பறை பயின்றவர்கள் உள்ளனர். அவர்கள் புதியவர்களுக்கு கற்பிக்க ஆர்வத்துடன் தயாராக உள்ளனர். எங்கள் நோக்கம், இந்த பழமையான தமிழ் மரபை பெருமையுடனும் ஒற்றுமையுடனும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே.

The origins of the Parai trace back to the earliest stages of human civilization. In prehistoric times, when humans lived in caves as hunter-gatherers, the hide from animal carcasses was experimented with to create percussion instruments—and thus, the Parai was born. It stands today as one of the oldest surviving drums in human history, a living relic of progressive civilization.

The Parai holds a deep and complex place in Tamil culture and identity. Sangam literature describes it as an instrument of royal dignity, performed in the courts of kings. In the 6th century CE, devotional hymns like the Thevaram even reference the Parai being played inside temple sanctums. Sadly, by the 14th century, socio-political influences labeled it “Thappu” (meaning inauspicious), in an attempt to undermine Tamil arts.

Today, the Parai is being rediscovered and celebrated worldwide—including here in the UK. At Thalir Thamizh Kalvikoodam, Parai learning began casually, but it gained enormous popularity after a vibrant performance at our 2023 Pongal festival. The enthusiasm led us to establish structured Parai classes, welcoming children and adults alike to learn this proud art form.

We now have a thriving group of 20+ Parai drummers, passionate about teaching newcomers and carrying forward this ancient Tamil tradition with pride and unity.

Beginners Parai Classes

  • Adults Parai Classes

    Saturdays - 11: 30 - 12:00 pm (TBC)

    Yearly Contribution:

    £75 for Thalir Members

    £125 for Non Thalir Members

    Parai Cost: £10

Join Parai Classes Today

Thalir Thamizh Kalvikoodam (TTK) is a non-profit organisation.

Please be aware that all our teachers are volunteers; they are very committed and they are putting their best effort to teach our children and help the community while we are away from home.