Thalir Thamizh Kalvikoodam

Tamil courses for children living in Kent (Dartford, Bexleyheath, Sidcup & Orpington)

Classes taken at St Columba's Catholic Boys' School, Halcot Avenue, Bexleyheath DA6 7QB

Class Timing: Reception & Year 1: Between 11 am - 12 pm | Year 2 and above: Between 11 am - 12:30 pm

மழலையர்

  • உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துக்களை அறிதல். ஒன்று முதல் பத்து வரை கூறுதல். காய்கள், பழங்கள் பெயர்களை அறிதல். விலங்குகள், மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல். நிறங்கள், சுவைகள், மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.

    நிறங்கள், வார நாட்கள், எண்கள், சுவைகள், பூக்கள் பெயர்களை சொல்லிப் பழகுதல். பாடல்கள், கதைகள், ஆத்திசூடி, படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல். குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல்.

    எழுத்துக்களின் குறில் நெடில் பற்றி அறிந்து தெரிந்து கொள்தல்

வகுப்பு - 1

  • உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது வகுப்பு ஒன்றில், பயில்கிறார்கள்.

    முதலாம் வகுப்பின் முடிவில் உயிர்மெய் எழுத்துக்களுடன்,

    (அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ மற்றும் ஊ வரிசை) கதைகள், பாடல்கள், தமிழ் மாதங்கள், எண்கள் போன்ற பல தலைப்புகளின் பெயர்களை சொல்லி எழுத பழகுகிறார்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்கிறார்கள்.

    தமிழ் மாதங்கள், எண்கள், குடும்பம், எண்கள்(11-20), உடல் உறுப்பின் பெயர்களை சொல்லி பழகுதல். படங்களை பார்த்து வார்த்தைகளை சொல்லுதல்.

    விலங்குகள் , மரங்கள், திசைகள், நிறங்கள், வார நாட்கள், எண்கள்(1-10), சுவைகள், பெயர்களை எழுத பழகுதல்.

    எழுத்துக்களின் குறில் நெடில் பற்றி அறிந்து தெரிந்து கொள்தல்

    சிறு சிறு சொற்றோடர்களையும் வாசிக்க வைக்கிறோம்.

    செய்யுள் : ஆத்திசூடி, சில திருக்குறள் கற்றல்

    இலக்கணம் :

    குறில் / நெடில் , அடுக்குத்தொடர் , ஒருமை , பன்மை

வகுப்பு – 2

  • உயிர்மெய் எழுத்துக்களின் இரண்டாம் பகுதியானது வகுப்பு இரண்டில் கற்கிறார்கள்.

    இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றோடர்களையும் வாசிக்க வைக்கிறோம்.

    சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். சிறு சொற்களையும், சிறு சொற்றோடர்களையும் நன்றாக வாசிக்கவும். மொழி மாற்றம் செய்தல்.

    தமிழ் மாதங்கள், எண்கள்(1-10), குடும்பம், வார நாட்கள், வடிவங்கள், திசைகள், நிறங்கள், சுவைகள் பெயர்களை எழுத பழகுதல்.

    பாடல்கள், கதைகள், படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல். எண்கள் 1 லிருந்து 20 வரை சொல்ல தெரிதல்.

    படங்களை பார்த்து வார்த்தைகளை சொல்லுதல்.

    பாடல்கள், கதைகள், படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல். எண்கள் 1 லிருந்து 50 வரை சொல்ல தெரிதல்.

    சொல் மற்றும் எழுத்து விளையாட்டுகள் மற்றும் குறுக்கெழுத்துப் பயிற்சி மூலம் எழுத்துக்களையும், வார்த்தைகளையும் மனதில் பதிய வைத்தல்.

    சுயவிடை அறிதல் (Comprehension) பயிற்சி கொடுத்தல்.

    செய்யுள் : திருக்குறள் கற்றல்

    இலக்கணம் :

    குறில் / நெடில் , இரட்டைக் கிளவி , அடுக்குத்தொடர் , ஒருமை , பன்மை

வகுப்பு – 3

  • வகுப்பு 2 / விரைவு கால வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.

  • உரைநடையை புரிந்து கொண்டு வாசிக்கவும் , எழுதவும் கற்றுகொள்கிறார்கள்.

    சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்து. சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாடல் மூலம் கற்று கொள்கிறார்கள். வ

    சுயவிடை அறிதல் (Comprehension) பயிற்சி கொடுத்தல்.

    மொழி மாற்றம் செய்தல், திருக்குறள், பழமொழிகளைக் கற்றல்.

    பாடத்தின் பயிற்சியின் மூலம் மொழித்திறன் வளர்த்தல்

  • பெயர் உரிச்சொல் (Adjective) , வினை உரிச்சொல்(Adverb) வினாச் சொற்கள், ஒருமை, பன்மை, கட்டளை வாக்கியம்

    பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர்(Pronoun) , வினைச்சொற்கள், வேற்றுமை உருபு

    காலநிலைகளை அறிதல். (அடிப்படை - நிகழ்காலம், எதிர்காலம்)

வகுப்பு – 4

  • வகுப்பு 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; வாக்கியங்கள் எழுதுதல், அடிப்படை இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்

  • உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல். அடிப்படை தமிழிலக்கணத்தின் புரிதல். வார்த்தைகளை , அடிப்படை வாக்கியங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.

  • வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.

    மொழி மாற்றம் செய்தல். வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல். பழமொழி , திருக்குறளின் தொன்மை அறிந்து, தெளிவுபடப் படித்து விளக்கம் சொல்லுதல்.

  • நறுந்தொகை , திருக்குறள்

  • பின் வரும் இலக்கணத்தின் மூலம் வாக்கியங்களை நன்றாக அமைக்க கற்றல். குழு விளையாட்டுகள் மூலம் இலக்கண பாடத்தை மனதில் பதிய வைத்தல்.

    • பெயர் உரிச்சொல் , வினை உரிச்சொல் வினாச் வாக்கியங்கள், எழுவாய்/பயனிலை/செயப்படுப் பொருள், சுட்டுப்பெயர், , வினைச்சொற்கள்,

    • எதிர்மறை கட்டளை, கட்டளை வாக்கியம் ,

    • இரண்டாம் வேற்றுமை உருபு(பெயர்ச் சொல் ஐ) , நான்காம் வேற்றுமை உருபு ('கு' ), நி

    • நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம்.

வகுப்பு – 5

  • வகுப்பு 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல். வகுப்பு 4 ல் உள்ள இலக்கணம் அறிவு அறிந்து மூன்று காலநிலைகளில் கண்டிப்பாக வாக்கியம் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

  • உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல். வாக்கியங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் எழுத கற்றுக் கொள்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பாடத்திட்டத்தில் உள்ள இலக்கண பாடங்களை புரிந்து 75 வார்த்தைகள் உள்ள பத்திகளை திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். கடிதம் மற்றும் கட்டுரை எழுத கற்றுக் கொள்கிறார்கள்.

  • வாக்கியங்களைத் பிழையின்றி படித்து மொழி மாற்றம் செய்தல்.

    பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் ஐவகை நிலங்களை தெரிந்து கொள்ளுதல். தஞ்சை கோவிலின் சிறப்பு , உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம்,

    இலண்டன் மாநகரில் தமிழ் மொழியின் பங்கு , நிறுத்தற்குறியீடுகள், விருந்தோம்பல் ,( திருக்குறள் / ஆத்திசூடியின் கதைகள்)

    பேச்சு வழக்கு வார்த்தைகளை & வாக்கியங்களை எழுத்து வழக்காக மாற்ற சொல்லிக் கொடுத்தல்.

    எழுதும் போது மயங்கொழிச் சொற்களை பிழையில்லாமல் திறம்பட எழுத சொல்லிகொடுத்தல். கதையை உருவாக்குதல் மூலம் கட்டுரை எழுத பயிற்சி கொடுத்தல். கடிதம் ,சுயவிடை அறிதல் (Comprehension) எழுத பயிற்சி கொடுத்தல்.

  • திருக்குறள் , ஒளவையார் அருளிய மூதுரை

  • இலண்டன் மாநகரில் படிக்கும் தமிழ் மாணவர்கள் இலக்கண பாடங்களின் கற்றுக் கொள்வதில் மூலமாக தமிழ் வாக்கியங்கள் அறிந்து மற்றும் புரிந்து கொள்கிறார்கள். இதனால் மாணவர்கள் திறம் பட எழுதுகிறார்கள்.

    பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சியின் வாயிலாக பயிலுதல். வகுப்பு 4 ல் படித்த இலக்கணங்களை பயிற்சி கொடுத்தல். குழு விளையாட்டுகள் மூலம் இலக்கண பாடத்தை மனதில் பதிய வைத்தல்.

    எழுவாய் , செயப்படுபொருள் ,பயனிலை , சொல்லின் வகைகள், வல்லினம் மிகும் இடங்கள், மூன்றாம் வேற்றுமை உருபு , புணர்ச்சி விதிகள், செய்வினை, செயப்பாட்டு வினை, இணைப்புச் சொற்கள்.

    துணை வினைச்சொற்கள் பயன்படுத்தி வாக்கியங்களை சிறப்பாக எழுத கற்றுக் கொடுத்தல்.

Year 6/ Pre GCSE

  • ஐந்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது 75 வார்த்தைகள் உள்ள பத்திகளை எழுத தெரிந்திருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் உள்ள இலக்கண பாடங்களை புரிந்து வைத்திருக்க வேண்டும். கடிதம் மற்றும் கட்டுரை எழுத தெரிந்திருக்க வேண்டும்.

  • இல்லாமல் திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். சுயவிடை கருத்தறிதல் (Comprehension) திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். கடிதம், உரையாடல் , கட்டுரை 100 முதல் 150 வார்த்தைகள் வரை திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். GCE பழைய தாள்களில் உள்ள கட்டுரையின் தலைப்புகளின் கருத்துக்களை கற்றுக் கொள்கிறார்கள். தமிழில் பிழைகள்

GCE / GCSE

  • சுயவிடை கருத்தறிதல் (Comprehension) எழுத தெரிந்திருக்க வேண்டும். தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் எழுத தெரிந்திருக்க வேண்டும். கடிதம்,உரையாடல் , கட்டுரை 100 முதல் 150 வார்த்தைகள் வரை திறம்பட எழுத தெரிந்திருக்க வேண்டும்.

  • சுயவிடை கருத்தறிதல் (Comprehension) திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். கடிதம்,உரையாடல் , கட்டுரை 150 முதல் 200 வார்த்தைகள் வரை திறம்பட எழுத கற்றுக் கொள்கிறார்கள். GCE பழைய தாள்களை முழுமையாக எழுதி Cambridge GCE O'Level தேர்விற்கு தகுதி ஆகிறார்கள். மாணவர்கள் தேர்வில் A* எடுக்க பயிற்சியும் , ஊக்கமும் முழுமையாக அளிக்கிறோம்

Special Class

  • 12 வயது இருக்க வேண்டும் மற்றும் மூன்றாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது சிறு சிறு வார்த்தைகளை படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

    இந்த வகுப்பில் நமது மாணவர்களுக்கு பேச்சு திறமையையும் , வாசிக்கும் திறமையையும் ஊக்குவிப்பதால் , தமிழ் மொழியில் திறம்பட பேச கற்றுக்கொள்கிறார்கள்.

    கருத்துக்களை பரிமாற கருத்தரங்கம் . சிந்தித்து கண்டறிய சொல்விளையாட்டு ,விமர்சிக்க விவாத மேடை என்று பலப்பல உத்திகளை கையாண்டு , மாணவர்கள் தயக்கமற்றும் தடையற்றும் தமிழில் பேசிப்பழக பேச்சு தமிழை கற்பிக்கும் வகுப்பே இந்த சிறப்பு வகுப்பு. அவர்கள் சொல்வளத்தை வளர்க்கும் பொருட்டு, தமிழ் புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்

Fast Track

  • உயிர்மெய் எழுத்துக்களை முழுமையாக விரைவு கால வகுப்புபில் கற்கிறார்கள்.

    இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றோடர்களையும் வாசிக்க வைக்கிறோம்.

    சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். சிறு சொற்களையும், சிறு சொற்றோடர்களையும் நன்றாக வாசிக்கவும். மொழி மாற்றம் செய்தல். எழுத்துக்களின் குறில் நெடில் பற்றி அறிந்து தெரிந்து கொள்தல். குறில் சொற்களை நெடிலாக மாற்றுதல்.

    தமிழ் மாதங்கள், எண்கள்(1-20), குடும்பம், வார நாட்கள், வடிவங்கள், திசைகள், நிறங்கள், சுவைகள் பெயர்களை கற்று கொள்கிறார்கள். படங்களை பார்த்து வார்த்தைகளை சொல்லுதல். பாடல்கள், கதைகள், படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல்.

    சொல் மற்றும் எழுத்து விளையாட்டுகள் மற்றும் குறுக்கெழுத்துப் பயிற்சி மூலம் எழுத்துக்களையும், வார்த்தைகளையும் மனதில் பதிய வைத்தல். சிறு சிறு சொற்றோடர்களையும் வாசிக்கிறார்கள்.

    சுயவிடை கருத்தறிதல் (Comprehension) பயிற்சி கொடுத்தல்.

  • திருக்குறள் கற்றல்

  • குறில் / நெடில் , இரட்டைக் கிளவி , அடுக்குத்தொடர் , ஒருமை , பன்மை.

School Calendar - 2025-2026

  • Term 1

    06/09/2025 - 25/10/2025

    06/09/2025 - Term Start

    25/10/2023 - Term End/ Parents Meeting

    26/10/2023 - Term Holiday

  • Term 2

    08/11/2025 - 20/12/2025

    08/11/2025 - Term Start

    15/11/2025 - Drawing Contest ஓவியப் போட்டி

    13/12/2025 - Oral Assessment

    20/12/2025 - Half-Yearly/Term End

    27/12/2025 - X-Mas Holiday

  • Term 3

    10/01/2026 - 14/02/2026

    10/01/2026 - Term Start/ Parents Consulting Meeting

    31/01/2026 - Pongal Celebration பொங்கல் விழா

    14/02/2026 - Term End

    21/02/2026 - Term Holiday

  • Term 4

    28/02/2026 - 28/03/2026

    28/02/2026 - Term Start

    07/03/2026 - பேச்சுப்போட்டி

    28/03/2024 - Term End

    04/04/2026 - Easter Holiday

    11/04/2026 - Easter Holiday

  • Term 5

    18/04/2026 - 16/05/2026

    18/04/2026 - Term Start

    25/04/2026 - திருக்குறள் போட்டி

    16/05/2026 - விளையாட்டு விழா

    Tentative Sports day

    16/05/2026 - Term End

  • Term 6

    30/05/2026 - 04/06/2026

    30/05/2026 - Term Start

    13/06/2026 - Oral Exam

    20/06/2026 - Annual Exam

    27/06/2026 - Rehearsal for Annual Day

    04/07/2026 - ஆண்டு விழா

Attendance Guideline

UK school guidelines recommends that each student should meet a minimum attendance criteria, which is 85%. In TTK,  the attendance criteria is minimum 75%. Over the past few years, one of our observations on the exam result has been that the students who are regular to school usually achieve the best results.

Our sincere request to all parents: Drop the children to Tamil school every week. This would not only improve the attendance but also help the students to prepare for the exams well.

Please be aware that all our teachers are volunteers; they are very committed and they are putting their best effort to teach our children and help the community while we are away from home. Please commit one hour / week for the best interest of our children and make the teachers and CTK proud for the work they do!!!

General Guideline/Rules

1. Our Thamizh school starts at 11 :00 am , So please be on time and the Children are expected to arrive at 10.50 am to the school.

2. Parents should collect the kids from their respective classrooms at 12.00pm (Reception & year 1) and 12:30pm (for all other classes ).

3. Please ensure your child brings in a homework notebook, classwork notebook, textbook and a water bottle.

4.Children are not allowed to bring in any toys to the classroom.

5. If you want your child to leave the school unattended , then you you must sign the consent form.

Contribution for the Academic Year

Thalir Thamizh Kalvikoodam (TTK) is a non-profit organisation and all teachers are volunteers.

Total to contribute - £200 per child

Please bank transfer all your contribution to the below charity account:

Thalir Thamizh Kalvikoodam (Ignore if name truncated)

AC No: 33253232 | Sort Code: 23 05 80 | Reference: Child name)